விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் அருகேயுள்ள அண்ணாநகர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் 26-ஆம் ஆண்டு வைகாசி பொங்கல் திருவிழா நடைபெற்றது.
பொங்கல்விழா 10 நாள்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் துவங்கியது. 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனுக்கு காப்பு அணிந்து விரதம் இருந்து வந்தனர். பொங்கல் விழாவின் உச்சகட்ட நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர்.
சர்வ அலங்காரம் செய்யப்பட்ட மாரியம்மன் திருத்தேரில் அண்ணாநகரின் நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் சரவணன், கந்தமுரளி, ஸ்ரீ தரன் ஆகியோர் பறவை காவடி எடுத்து வந்தனர். ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு மாவிளக்கு, முளைப்பாரி, பால்குடம் சுமந்து வந்து நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
பொங்கல் விழாவை முன்னிட்டு தினமும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.