விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் காவல் நிலையத்தில் போலீஸார் பற்றாக்குறையால் சட்டம் ஒழுங்குப் பிரச்னையைத் தீர்க்க முடியாமல் போலீஸார் தவிப்பதாக புகார் எழுந்துள்ளது.
சுமார் 20 கி.மீ. சுற்றளவில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கியது மல்லாங்கிணர் காவல் நிலையம். இது துவங்கப்பட்டபோது 30 காவலர்கள் பணிபுரிந்து வந்தனர். இங்கிருந்து மாற்றலாகிச் செல்லும் காவலர்களுக்கு பதில் புதிதாக போலீஸார் நியமனம் செய்யப்படாததால் தற்போது சார்பு ஆய்வாளர், சிறப்பு சார்பு ஆய்வாளர் உள்பட 10 போலீஸார் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். ஆய்வாளர் அலுவலகம், துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம், மதுரை நீதிமன்றம், விருதுநகர் நீதிமன்றம், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் என தினமும் 5 போலீஸார் வெளியில் சென்று விடுவதால், மீதமுள்ள 5 போலீஸார்தான் காவல் நிலையத்தில் உள்ளனர்.
இதனால், கிராமங்களில் நடக்கும் பொங்கல், திருவிழா, அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு போலீஸாரால் போதிய பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை. ஆகவே இந்த காவல் நிலையத்துக்கு போதுமான காவலர்களை நியமிக்க மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

மெட்ரோ விவகாரத்தில் அமைச்சர்கள் பிடிஆர், மூர்த்தி பொய் பேசுகிறார்கள்: அண்ணாமலை

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?

நீதிக் கதைகள்! அம்மாவின் புதிய யோசனை!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

