தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

இனாம்காசிரெட்டியாபட்டியில் பேவர் பிளாக் சாலை

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், இனாம்காசிரெட்டியாபட்டியில் பொதுமக்கள் உபயோகத்திற்காக பேவர் பிளாக் சாலையை ஞாயிற்றுக்கிழமை சட்டப்பேரவை உறுப்பினர் க. பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.

Updated On :13 மே 2013, 12:17 am IST

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், இனாம்காசிரெட்டியாபட்டியில் பொதுமக்கள் உபயோகத்திற்காக பேவர் பிளாக் சாலையை ஞாயிற்றுக்கிழமை சட்டப்பேரவை உறுப்பினர் க. பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.

     இனாம்காசிரெட்டியபட்டி கிராமத்தில் மழை நீர் தரையில் இறங்கும் வகையிலான பேவர் பிளாக் சாலை அமைக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ., பாண்டியராஜனிடம் பொதுமக்கள் மனு அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் சட்டப்பேரவை மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் ஒதுக்கப்பட்டு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன.

    தற்போது, இப்பணிகள் முடிவடைந்ததால், அதன் தொடக்க விழா அக்கிராம ஊராட்சியில் நடைபெற்றது. விழாவுக்கு ஊராட்சித் தலைவர் டி. சந்திரன் தலைமை வகித்தார். வட்டார ஊராட்சி உறுப்பினர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். இதில், விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் க. பாண்டியராஜன் பங்கேற்று பொதுமக்களின் உபயோகத்திற்காக சாலையைத் திறந்து வைத்தார்.

    அதையடுத்து, தாதம்பட்டி ஊராட்சியில் சட்டப்பேரவை மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ. 5 லட்சத்தில் அமைக்கப்பட்ட கிராம இணைப்பு தார்ச் சாலை பணிகள் முடிந்த நிலையில், அதனைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.

     நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர் எம். பாண்டியராஜன், ஒன்றிய அவைத்தலைவர் சேகர் உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.