திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

திருச்சுழி பகுதியில் மர்மக் காய்ச்சல்

திருச்சுழியில் மர்மக் காய்ச்சல் பரவுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்

Updated On :19 மே 2013, 6:37 pm

திருச்சுழியில் மர்மக் காய்ச்சல் பரவுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

   திருச்சுழி கிழக்குத் தெருவில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி கிடையாது. பல இடங்களில் கழிவுநீர் தேங்கி சுற்றுசூழல் பாதித்துள்ளது.

    கடந்த சில நாள்களில் இப்பகுதியில் 10-க்கும் மேற்பட்டோர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இதுகுறித்து கிழக்குத் தெருவைச் சேர்ந்த ராதா கூறுகையில்: கழிவுநீர் தேங்கி நிற்பதால் தான் காய்ச்சல் பரவியுள்ளது.

   ஊராட்சி நிர்வாகம் எங்கள் பகுதியில் கால்வாய் அமைத்து கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.