தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மாற்றுத் திறனாளிகளுக்கு புத்தாடை வழங்கல்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில், வட்டார மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு சங்கம் சார்பாக, மாற்றுத் திறனாளிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் புத்தாடை வழங்கும் விழா நடைபெற்றது. பேரூராட்சி தலைவர்

Updated On :14 நவம்பர் 2013, 6:52 pm

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில், வட்டார மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு சங்கம் சார்பாக, மாற்றுத் திறனாளிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் புத்தாடை வழங்கும் விழா நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் காந்திமதி தலைமை வகித்தார். மனுநூல் நிலைய நிறுவனர் பரதன் முன்னிலை வகித்தார். மதுரை தியாகம் பெண்கள் அறக்கட்டளை நிறுவனர் அமுதசாந்தி, ஓய்வுபெற்ற அரசு அலுவலர் நலச்சங்க செயலாளர் சீனிவாசன், சுகாதார ஆய்வாளர் சரத்பாபு, மனுடிரஸ்ட் செயலாளர் கருப்பணன், சமத்துவ மக்கள் மன்றத் தலைவர் தனலட்சுமி ஆகியோர் விழிப்புணர்வு குறித்து பேசினார்கள். சங்கத் தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் சதுரகிரி, பொருளாளர் ரவி மற்றும் உறுப்பினர்கள் மோகன், முத்துமணி, பாண்டி, சித்ராதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர். மாற்றுத் திறனாளிகள் 250 பேருக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.