கிராமப்புறங்களில் மாணவர்கள் வசதிக்காக கூடுதலாக நகரப் பேருந்துகளை இயக்க வேண்டுமெனவும், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரனுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பொதுமக்கள் சார்பில் தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் ஒன்றியச் செயலாளர் சின்னராசா மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு:
திருச்சுழி அருகே நரிக்குடி, இலுப்பையூர், விடத்தகுளம், தமிழ்பாடி, சித்தலக்குண்டு, ரெட்டியபட்டி, கத்தாளம்பட்டி, ஆலடிபட்டி, பொம்மகோட்டை, நாரத்தம்பட்டி, கிருஷ்ணாபுரம், புலிக்குறிச்சி, குச்சம்பட்டி புதூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல்வேறு தேவைகளுக்காக தினமும் திருச்சுழி, காரியாபட்டி மற்றும் அருப்புக்கோட்டைக்கு வந்து செல்கின்றனர்.
மேலும் இந்த கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் அருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும் காரியாபட்டியில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு போதிய எண்ணிக்கையில் பஸ் வசதி இல்லை. குறிப்பாக காலை, மாலை வேளைகளில் பெரும்பாலான கிராமங்களுக்கு ஒரு டிரிப் மட்டுமே டவுண் பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்களில் பயணிகளின் நெரிசல் அதிகம் உள்ளது. குறித்த நேரத்தில் பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர்.
மேலும் நகர்ப் பகுதிகளுக்கு கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் பஸ் வசதி இன்றி தவிக்கின்றனர். சில கிராமங்களில் இருந்து ஷேர் ஆட்டோக்களில் அதிக எண்ணிக்கையில் 20 பேர் வரை பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வருகின்றனர். மேலும் சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு வந்து செல்கின்றனர். இந்த விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதிக பயணிகளை ஏற்றிச் செல்வதால் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு கிராமங்களுக்கு கூடுதலாக நகரப் பேருந்துகளை இயக்கவேண்டும். சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஏராளான பொதுமக்களிடம் கையெழுத்துப் பெற்று அந்த மனு அனுப்பப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மும்பை இந்தியன்ஸ் பும்ராவை அதிகம் நம்பியிருக்கக் கூடாது: டு பிளெஸ்ஸிஸ்

ஃபிடல் காஸ்ட்ரோ (அமெரிக்காவை கதிகலங்கச் செய்த புரட்சி போராளி)

சான்றோர்...பாலர்

கங்கை நதிப்புறத்து...நவீன இலக்கியச் சிற்பிகள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

