திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

மயானத்துக்கு செல்ல பாலம்: அதிகாரிகள் உறுதி

காரியாபட்டி அருகேயுள்ள கீழஉப்பிலிகுண்டு கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மயானத்தையொட்டி நிலையூர்-கம்பிக்குடி கால்வாய் செல்கிறது

Updated On :30 ஆகஸ்ட் 2014, 6:51 pm

காரியாபட்டி அருகேயுள்ள கீழஉப்பிலிகுண்டு கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மயானத்தையொட்டி நிலையூர்-கம்பிக்குடி கால்வாய் செல்கிறது. இதன் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. நாளடைவில் பாலம் சேதமடைந்து மேல் பரப்பில் உள்ள கான்கிரீட் முற்றிலும் விழுந்துவிட்டது. தற்போது தூண்கள் மட்டும் நிற்கின்றன. இதனால், அக்கிராமத்தில் யாராவது இறந்தால் சடலத்துடன் கால்வாய்க்குள் இறங்கி மயானத்திற்குச் செல்லவேண்டியுள்ளது.

கால்வாயில் தண்ணீர் வந்தால் பல கி.மீ., தூரம் சுற்றிச் செல்ல வேண்டும். கால்வாய் குறுக்கே புதிய பாலம் அமைக்க நான்கு ஆண்டுகளாக கிராமத்தினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் கிராமத்தினர் மறியல் நடத்தப் போவதாக வந்த தகவலை அடுத்து, வட்டாட்சியர் பொன்ராமர், பி.டி.ஓ. முத்துலெட்சுமி, துணை பி.டி.ஓ., பத்மினி உள்ளிட்ட அதிகாரிகள் பாலத்தைப் பார்வையிட்டனர். ஆட்சியரிடம் அனுமதி பெற்று விரைவில் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்ததை தொடர்ந்து மக்கள் போராட்ட முடிவை கைவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.