தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

பி.புதுப்பட்டியில் விலையில்லா பொருள்கள் வழங்கல்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் அருகேயுள்ள பி. புதுப்பட்டியில் பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா கிரைண்டர், மிக்ஸி, மற்றும் மின்விசிறி வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :2 ஜனவரி 2014, 6:54 pm

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் அருகேயுள்ள பி. புதுப்பட்டியில் பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா கிரைண்டர், மிக்ஸி, மற்றும் மின்விசிறி வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருச்சுழி வட்டாட்சியர் புருசோத்தமன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத் தலைவர் சதீஷ்குமார், துணைத் தலைவர் அழகர்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் 310 பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்களை காரியாபட்டி ஒன்றியக்குழு தலைவர் முத்துலெட்சுமி, துணைத் தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் வழங்கினர். சிறப்பு திட்ட செயலாக்க வட்டாட்சியர் கணேசசுகுமாரன், ஒன்றிய விவசாயப் பிரிவு செயலாளர் முத்துபாண்டி, கிராம நிர்வாக அலுவலர் திருப்பதி, கூட்டுறவு வங்கித் தலைவர் முருகன், அதிமுக கிளைச் செயலாளர்கள் பாலகிருஷ்ணன், ரவீந்திரன், பஞ்சவர்ணம், தெய்வேந்திரன், ராசு தொழிற்சங்கத் தலைவர் சோலைகவுண்டன்பட்டி வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.