விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி எஸ்.பி.எம். அறக்கட்டளை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மைய ஆலோசனைக் கூட்டம் மனு நூல் நிலையத்தில் நடைபெற்றது.
மைய அமைப்பாளர் கமலவேணி தலைமை தாங்கினார். உமா முன்னிலை வகித்தார். திட்ட ஊக்குனர் யோகா வரவேற்றுப் பேசினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் திலகவதி மையத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் பற்றி பேசினார். குழந்தைகள் மையத்தினை எஸ்.பி.எம். அறக்கட்டளை நிறுவனர் அழகர்சாமி தொடங்கி வைத்து பேசினார்.
மனுநூல் நிலைய நிறுவனர் பரதன், விவேகானந்தா சேவாலய தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் மகளிர் குழு அமைப்பாளர்கள், மகளிர் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பெண்களிடம் கருத்துகள் கேட்டறிந்து மையத்தின் செயல்பாடுகள் பற்றி குழு விவாதம் நடத்தப்பட்டது.
குழந்தைகள் மற்றும் பெண்கள் நல அமைப்பு சார்பில் பெண்களின் கல்வி, சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கு பாடுபடுவது என்றும், சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துவது என்றும், பெண்களின் தனி வருமானத்தை, பெருக்கும் வகையில் இலவச தொழிற்பயிற்சிகள் நடத்துதல், மகளிர் குடும்ப ஆலோசனை மையம் மற்றும் இலவச சட்ட உதவி மையம் நடத்துதல், குழந்தை தொழிலாளர்கள் மற்றும் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பது, இளவயது திருமணங்களை தடுத்தல், பாலியல் வன்கொடுமை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சுற்றுச் சூழல் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்துகளை பள்ளி மாணவர்கள் மூலம் பொதுமக்களிடம் எடுத்து செல்லுதல் போன்ற பணிகளை செய்வது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
முடிவில் களப்பணியாளர் வெங்கடேஷ்வரி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மும்பை இந்தியன்ஸ் பும்ராவை அதிகம் நம்பியிருக்கக் கூடாது: டு பிளெஸ்ஸிஸ்

ஃபிடல் காஸ்ட்ரோ (அமெரிக்காவை கதிகலங்கச் செய்த புரட்சி போராளி)

சான்றோர்...பாலர்

கங்கை நதிப்புறத்து...நவீன இலக்கியச் சிற்பிகள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

