விருதுநகர் மாவட்ட குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்க மாநில துணைத் தலைவர் ஆ.காமராஜ் புதன்கிழமை உள்ளாட்சிதுறை அமைச்சரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பருவமழை பொய்த்ததால் விருதுநகர் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. அனைத்து பகுதிகளிலும் குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் விதமாக குடிநீர் திட்டப் பணிகளுக்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யவேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதி முழுவதையும் குடிநீர்த் திட்டப் பணிகளுக்கு செலவிடவேண்டும். மழைக்காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை பெரிய குழாய்கள் மூலம் கொண்டு வந்து விருதுநகர் மாவட்ட குடிநீர் தேவைக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட உள்ளாட்சித் துறை அமைச்சர் அதுபற்றி பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்வதாக மாநில துணைத் தலைவர் ஆ.காமராஜிடம் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மும்பை இந்தியன்ஸ் பும்ராவை அதிகம் நம்பியிருக்கக் கூடாது: டு பிளெஸ்ஸிஸ்

ஃபிடல் காஸ்ட்ரோ (அமெரிக்காவை கதிகலங்கச் செய்த புரட்சி போராளி)

சான்றோர்...பாலர்

கங்கை நதிப்புறத்து...நவீன இலக்கியச் சிற்பிகள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

