விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகே முருக பக்தர்களின் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மல்லாங்கிணறு அருகேயுள்ளது சோலைகவுண்டன்பட்டி. இந்த கிராம மக்கள் பெண்கள் உள்பட சுமார் 800-க்கும் மேற்பட்டோர் ஆண்டுதோறும் 4 மாதங்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக திருச்செந்தூர் சென்று முருகனை தரிசனம் செய்து திரும்புவதை பல ஆண்டுகளாக வழக்கமாக கொண்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் கலந்து கொண்ட சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்கள் குழுவை சேர்ந்த வேல்முருகன் கூறியதாவது: கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இக்கிராமத்திலிருந்து கிராம மக்கள் முருகனுக்கு மாலை அணிந்து திருச்செந்தூர் சென்று முருகனை தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது 52-வது ஆண்டாக சுமார் 800-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட கிராம மக்கள் மாலை அணிந்து 120 நாள்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக திருச்செந்தூர் சென்று முருகனை தரிசனம் செய்து திரும்பி வருகிறோம். கடவுள் பக்தி அதிகரிப்பதுடன் கிராமத்தில் எந்த பிரச்னையும் இன்றி அனைவரும் ஒற்றுமையாக வளமாக வாழ்ந்து வருகிறோம் என்றார். பூஜை முடிந்ததும் கிராம மக்கள் இரவு 11 மணியளவில் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை புறப்பட்டுச் சென்றனர்.
பூஜைக்கான ஏற்பாடுகளை திருச்செந்தூர் முருக பக்தர்கள் பாதயாத்திரை குழுவினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மும்பை இந்தியன்ஸ் பும்ராவை அதிகம் நம்பியிருக்கக் கூடாது: டு பிளெஸ்ஸிஸ்

ஃபிடல் காஸ்ட்ரோ (அமெரிக்காவை கதிகலங்கச் செய்த புரட்சி போராளி)

சான்றோர்...பாலர்

கங்கை நதிப்புறத்து...நவீன இலக்கியச் சிற்பிகள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

