தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

வேளாண் இடுபொருள்கள் வழங்கும் விழா

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ம.ரெட்டியபட்டி வட்டாரம் பள்ளிமடம், முத்துராமலிங்கபுரம், பரளச்சி, கத்தாளம்பட்டி, ஆலடிபட்டி பகுதிகளில் அட்மா திட்டத்தின் கீழ் திருந்திய நெல் சாகுபடி கம்பி, மிளகாய், மக்காச்சோள பயிர்களில் செயல்விளக்க திடல்கள் அமைக்கப்பட்டன. இச்செயல் விளக்க திடல்களை அமை

Updated On :30 ஜனவரி 2014, 6:49 pm

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ம.ரெட்டியபட்டி வட்டாரம் பள்ளிமடம், முத்துராமலிங்கபுரம், பரளச்சி, கத்தாளம்பட்டி, ஆலடிபட்டி பகுதிகளில் அட்மா திட்டத்தின் கீழ் திருந்திய நெல் சாகுபடி கம்பி, மிளகாய், மக்காச்சோள பயிர்களில் செயல்விளக்க திடல்கள் அமைக்கப்பட்டன. இச்செயல் விளக்க திடல்களை அமைத்து விவசாயிகளுக்கு உரங்கள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்கள் வழங்கப்பட்டன. நன்கு பயிர்கள் விளைந்த வயல்களில் செயல் விளக்க திடல்கள் அமைக்க ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள இடுபொருட்கள் வழங்கப்பட்டன. பயனாளியின் பங்குத் தொகையாக ரூ.400 பெறப்பட்டது. செயல்விளக்க திடலுக்கு தேவையான இடுபொருட்களை வேளாண்மை உதவி இயக்குநர் நாச்சியாரம்மாள் பயனாளிகளுக்கு வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரேமா, தொழில்நுட்ப வல்லுனர்கள் மாரியம்மாள், ராஜலெட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.