திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கல்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறில் அரசு மேல்நிலைப் பள்ளி, செந்திக்குமார நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

Updated On :3 ஜூலை 2014, 6:35 pm

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறில் அரசு மேல்நிலைப் பள்ளி, செந்திக்குமார நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர்கள் தேவசகாயம், சண்முகத்தாய் ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டுறவு வங்கித் தலைவர்கள் பால்ச்சாமி, முருகன், துணைத் தலைவர் கருப்பாயி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிச் செயலர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். 307 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை காரியாபட்டி ஒன்றியக்குழுத் தலைவர் முத்துலெட்சுமி, துணைத் தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் வழங்கிப் பேசினர். நகரச் செயலர் சொக்கையா, பேரூராட்சி கவுன்சிலர்கள் துளசிதாஸ், காளிமுத்து, பாலச்சந்திரன், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கர்ணன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.