திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

காரியாபட்டி ஒன்றியக் குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் புகார்

வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக காரியாபட்டி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.

Updated On :28 ஜூன் 2014, 6:36 pm

வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக காரியாபட்டி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.

காரியாபட்டி ஒன்றியக் குழு கூட்டம் எம்.ஜி.ஆர். கூட்ட அரங்கில் தலைவர் முத்துலெட்சுமி தலைமையில், துணைத் தலைவர் ராமமூர்த்தி, ஆணையாளர்கள் முத்துலெட்சுமி, மகாலெட்சுமி முன்னிலையில் நடைபெற்றது. மேலாளர் சங்கரநாராயணன் வரவேற்றுப் பேசினார்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

உறுப்பினர் கவிதா: பல்வேறு திட்டங்களின் கீழ் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான டெண்டர் நோட்டுகளை பல மாதங்களாக காணவில்லை. நோட்டுகள் இல்லாததால் வளர்ச்சிப் பணிகளை செய்து முடித்த ஒப்பந்ததாரர்கள் அதற்கான தொகையினை வாங்க முடியவில்லை.

ஆணையாளர் மகாலெட்சுமி: விரைவில் டெண்டர் நோட்டுகளை தேடி கண்டுபிடிப்போம்.

உறுப்பினர் கார்த்திகா தேவி: விலையில்லா, ஆடு, மாடு வழங்க பயனாளிகளை தேர்வு செய்யும் குழுவில் ஒன்றியக்குழு உறுப்பினர்களையும் சேர்க்க வேண்டும்.

துணைத் தலைவர் ராமமூர்த்தி: மாவட்ட ஆட்சியரிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும். பாஞ்சார் கிராமத்தில் வாறுகால் பணி நடைபெற்று வருகிறது. முழுமையாக வாறுகால் அமைத்தால் தான் கழிவுநீரை வெளியேற்ற முடியும் அதற்கு கூடுதல் நிதி ஒதுக்கவேண்டும்.

உறுப்பினர் ஈஸ்வரி: ஆதிதிராவிடர் காலனியில் ஆண், பெண் தனித்தனி குளியலறை கட்டவும், புதிய சிமெண்ட் சாலை அமைக்கவும் 6 முறை ஒன்றியக் குழு கூட்டத்தில் நிதி ஒதுக்க கோரிக்கை வைத்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை.

வளர்ச்சிப் பணிகள் நடைபெறுவதை அதிகாரிகள் தடுக்கின்றனர். மக்கள் பிரதிநிதியாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டு எந்த பயனும் இல்லை. இனி தமிழக முதல்வரிடம் இதுபற்றி முறையிடுவேன் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.