அருப்புக்கோட்டையில் இருந்து சுத்தமடத்துக்கு அரசுப் பேருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. பேருந்தில் சிவயோகன் ஓட்டுநராகவும், சண்முகசுந்தரம் நடத்துநராகவும் இருந்தனர். பேருந்து ரெட்டியபட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அந்த பகுதியில் சாலை மோசமாக இருந்ததால் பேருந்தை ஓட்டுநர் மெதுவாக ஓட்டி சென்றாராம். அப்போது பேருந்தில் பயணம் செய்த விஜயகுமார், பாண்டியராஜ் ஆகியோர் அவரிடம் தகராறு செய்தனர். தகராறு முற்றி ஓட்டுநர் சிவயோகனை 2 பேரும் சேர்ந்து தாக்கினராம். இதுகுறித்து ரெட்டியபட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிந்து விஜயகுமாரை கைது செய்தனர். கைதான விஜயகுமார் மற்றும் போலீஸார் தேடி வரும் பாண்டியராஜ் ஆகியோர் ராணுவ வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.