விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி திருச்சுழி பகுதியில் மானாவாரியில் நடவுமுறை தொழில்நுட்பத்தினை பயன்படுத்தினால் துவரையில் மகசூலை அதிகரிக்கலாம் என வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் பயிர்களில் உளுந்து, பாசி பயறு, துவரை ஆகியவை மிகமுக்கியமான பயிர்களாகும். அதிலும், துவரை தென் மாநிலங்களில் ஒரு முக்கிய பயிராகும். மானாவாரியில் நடவுமுறை துவரை சாகுபடி தொழில்நுட்பத்தினை பயன்படுத்தினால் துவரையில் மகசூலை அதிகரிக்கலாம். ஒரு ஹெக்டேருக்கு தேவையான துவரை நாற்றுகளை தயார் செய்வதற்கு 2.5 கிலோ விதை போதுமானது. எம்.ரெட்டியபட்டியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் சி.ஓ. (ஆர்.ஜி) 7 துவரை விதைகள் மானிய விலையில் கிடைக்கும். மானாவாரியில் சரியான நேரத்தில் மழை பொய்த்துவிட்டாலும், மழை வந்தபின் நாற்றுகளை நடவு செய்யலாம். கடினப்படுத்தப்பட்ட விதை நாற்றின் துரிதவேர் வளர்ச்சி மற்றும் வறட்சியை தாங்க வழிவகை செய்கிறது. பக்க கிளைகள் மற்றும் தாவர வளர்ச்சி நன்றாக உள்ளதால் காய் மற்றும் விதை பிடிப்புதிறன் அதிகமாக மகசூலை அதிகரிக்கலாம். மேலும், எம்.ரெட்டியபட்டி வேளாண்மை விரிவாக்க மையத்தில் துவரை நடவு பற்றிய தொழில்நுட்ப விவரங்களை பெற 04566 284585 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

மெட்ரோ விவகாரத்தில் அமைச்சர்கள் பிடிஆர், மூர்த்தி பொய் பேசுகிறார்கள்: அண்ணாமலை

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?

நீதிக் கதைகள்! அம்மாவின் புதிய யோசனை!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

