விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளர்ச்சி மன்ற கூட்டரங்க வளாகத்தில், விநாயகர் சதுர்த்தி முன்னேற்பாடு பணிகள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் வே.ராஜாராமன் பங்கேற்று பேசுகையில், விநாயகர் சதுர்த்திக்கு களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை தண்ணீரில் கரைப்பது வழக்கம். அண்மைக்காலமாக பிளாஸ்டர் பாரிசினால் செய்த வண்ணப்பூச்சுகளுடன் கூடிய சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கின்றனர். இதனால், மாசுபடும் சூழ்நிலையிருக்கிறது.

அதனால் களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் ரசாயன கலவையற்ற சிலைகளை மட்டும் வழிபாடு செய்வதற்கு பயன்படுத்த வேண்டும்.
வீதிகளில் வைத்து வழிபடும் போது பொதுமக்களுக்கு எவ்விதமான இடையூறும் இருக்கக் கூடாது. பந்தலில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை உபயோகப்படுத்தக் கூடாது. ஒலி பெருக்கிகள் அமைக்க காவல் நிலையங்களில் அனுமதி பெற வேண்டும். சிலைகள் வைக்கப்பட்ட பந்தலில் தீயை அணைக்கக் கூடிய மணல், தண்ணீர் தயாராக வைத்திருக்க வேண்டும்.
விநாயகர் சிலைகளை கரைக்கும் நேரம் மற்றும் நீர் நிலை குறித்த விவரங்களை காவல் நிலையங்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஊர்வலத்தின் போது மின்கம்பங்களைத் தொடாதவாறும், பட்டாசு வெடிக்கவும் கூடாது. எனவே பாதுகாப்பான முறையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என விழா அமைப்பாளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துக்குமரன், நேர்முக உதவியாளர்(பொது) நாகஜோதி, வருவாய் கோட்டாட்சியர் சுபாநந்தினி, காவல் துறை துணைக் கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் விழாக்குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.