விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளியில் குன்னிமுத்து தின்ற மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில்-குன்னூரைச் சேர்ந்தவர் சி.கருப்பையா (36). இவருக்கு இஷாந்தராஜ் (8), டேவிட்ராஜ் ஆகிய இரு மகன்கள்.
இஷாந்தராஜ், எஸ்.ராமச்சந்திராபுரம், தொடக்கப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் சுமார் 10 தினங்களுக்கு முன் பள்ளி அருகே வேலியிலிருந்த குன்னிமுத்து செடியிலிருந்த காய்களை பறித்துத் தின்றுள்ளார். இது குறித்து தகவலறிந்து கருப்பையா மகனுக்கு நாட்டு வைத்தியம் பார்த்து வந்துள்ளார். இரு தினங்களுக்குப் பின்னர் இஷாந்தராஜ் மிகவும் சோர்வாக காணப்பட்டுள்ளார். இதையடுத்து அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருதத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிந்தார்.
இது குறித்து கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் கருப்பையா கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்செந்தூரில் ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

உதவி ஆய்வாளரை கொல்ல முயற்சித்தவா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

சீருடையுடன் மது அருந்திய கல்லூரி மாணவா்கள்: மதுக் கூடத்தை மூட எஸ்.பி. உத்தரவு

சதுரங்கப் போட்டி: கொண்டலூா் அரசுப் பள்ளி மாணவா் சாதனை
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்


