தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

குற்றச் செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

Updated On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: 5 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

 ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை சாலையில் உள்ள ராஜாமணி நாடார் குடியிருப்பில் குடியிருந்து வருபவர் அறிவழகன் மனைவி பிரதீபா (30). இதே குடியிருப்பில் ப.காளிதாஸ் (38) என்பவர் குடியிருந்து வருகிறார். இரு குடும்பத்திற்கும் இடையே பிரச்னை இருந்துவந்துள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு பிரதீபா வீட்டு தண்ணீர் குடத்தில் காளிதாஸ் மிளகாய் பொடியைப் போட்டுள்ளார். இதனைப் பார்த்த மற்றவர்கள் காளிதாஸை சத்தம் போட்டுள்ளனர். இரவு பிரதீபா கணவருடன் இருந்த போது, காளிதாஸ், ப.முனியாண்டி (26), தி.பழனிக்குமார் (22), செள.மாரியப்பன் (24), மு.காளிராஜ் (28) ஆகியோர் வந்து தகராறு செய்து ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்களாம்.

 இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் பிரதீபா புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.

ராஜஸ்தான் மாநில வியாபாரியை காரில் கடத்தி தாக்குதல்: 8 பேர் மீது வழக்கு

திருத்தங்கலில் ராஜஸ்தான் மாநில வியாபாரியை காரில் கடத்திச் சென்று தாக்கியதாக 8 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராகுல்ஜெயின் (31). இவர் பட்டாசு வியாபாரம் தொடர்பாக அடிக்கடி சிவகாசி வருவது வழக்கம்.அப்போது சிவகாசியைச் சேர்ந்த பாண்டீஸ்வரன் மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் அறிமுகமாகியுள்ளனர்.  இதையடுத்து மூவரும் சேர்ந்து பட்டாசு தொழில் செய்து வந்தனர்.பாண்டீஸ்வரன் மற்றும் கண்ணனின் போக்கு பிடிக்காததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து ராகுல்ஜெயின், வியாபாரத்தில் உள்ள தனது பங்கு பணத்தை கொடுத்து விடுங்கள் என கேட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி, ராகுல்ஜெயின், திருத்தங்கல் சத்யா நகர் ரயில்வே கேட்டருகே நடந்து சென்றபோது, பாண்டீஸ்வரன், கண்ணன், ரகு மேலும் 5 பேர்  அவரை காரில் கடத்திச் சென்று தாக்கி, அரிவாளைக் காட்டிமிரட்டி அடையாளம் தெரியாத இடத்தில் இறக்கி விட்டுவிட்டு சென்று விட்டார்களாம்.பின்னர் திருத்தங்கல் வந்த ராகுல்ஜெயின் இதுகுறித்து வியாழக்கிழமை திருத்தங்கல் போலீஸில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் பாண்டீஸ்வரன் உள்ளிட்ட 8 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அகதி பெண்ணிடம்  கத்தியைக் காட்டி மிரட்டியவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண்ணுக்கு தொல்லை கொடுத்து மிரட்டிய நபரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

 ஸ்ரீலங்கா, வவுனியா மாவட்டம், பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் விஜயசேகர் மனைவி தியாழினி (30). இவருக்கு ரிஜினா (12), டேனியல் (10) என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.  மொட்டமலை அகதிகள் முகாமில் குடியிருந்து வருகிறார். கணவர் விஜயசேகர் ஆஸ்திரேலியாவில் உள்ளார். இதே அகதி முகாமில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெனீஸ்டன் (32) என்பவரும் வசித்து வருகிறார். தியாழினிக்கும் ஜெனீஸ்டனுக்கும் சில ஆண்டுகளாக பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் தியாழினி குடும்பத்துடன் இலங்கைக்கு செல்ல தயாராகி வந்துள்ளார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஜெனீஸ்டன்  கத்தியைக் காட்டி தியாழினியை மிரட்டியுள்ளார்.இது குறித்து தியாழினி, வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜெனீஸ்டனைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.