திருச்சுழி அருகே சாலையை ஆக்கிரமித்து கதிரடிப்பதால் வாகனங்கள் விபத்து
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள தும்முசின்னம்பட்டி பகுதியில் சாலையை ஆக்கிரமித்து விவசாயிகள் கதிரடிப்பதால், இரு சக்கர வாகனங்கள்


விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள தும்முசின்னம்பட்டி பகுதியில் சாலையை ஆக்கிரமித்து விவசாயிகள் கதிரடிப்பதால், இரு சக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாவதை தடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தும்முசின்னம்பட்டி கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயறு, நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் அதிகம் பயிரிட்டுள்ளனர். இந்த ஆண்டு இப்பருவத்தில் பயிர் சாகுபடி முடிந்து அறுவடைக்காலம் வந்துள்ளது. இந்நிலையில், ஏராளமான விவசாயிகள் தாங்கள் விரைவாகவும், செலவின்றியும் கதிரடிப்பதற்கு, இப்பகுதியில் அருப்புக்கோட்டையிலிருந்து தும்முசின்னம்பட்டி வழியாக சாயல்குடி செல்லும் சாலையை ஆக்கிரமித்து, நாள்தோறும் கதிரடித்து வருகின்றனர்.
அதிக போக்குவரத்துமிக்க இச்சாலையை கதிரடிக்க பயன்படுத்துவதால், கனரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, இச்சாலையை ஆக்கிரமித்து விவசாயிகள் கதிரடிப்பதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...