விருதுநகர் மாவட்டம் ம.ரெட்டியபட்டியை அடுத்துள்ள மறவர்பெருங்குடி கிராமத்தில் குடியிருப்புப் பகுதிகளிலும், சாலையோரங்களிலும் சேதமடைந்து காணப்படும் மின்கம்பங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
மறவர்பெருங்குடி கிராமத்திலும் அதனையொட்டி அமைந்துள்ள வெள்ளையாபுரம், மீனாட்சிபுரம் ஆகிய மூன்று கிராமங்களிலும் மொத்தம் சுமார் 1500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு விவசாயமே முதண்மைத் தொழிலாக உள்ளது. இக்கிராமங்களின் உள்பகுதி குடியிருப்புகளிலும் அத்துடன் இக்கிராமங்களை இணைக்கும் சாலைகளிலும் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் பெரும்பாலானவை கான்கிரீட் பெயர்ந்து உள்ளிருக்கும் கட்டுமானக் கம்பிகள் வெளியில் தெரிவதுடன் அக்கம்பிகளும் துருப்பிடித்த நிலையில் எப்போது உடைந்து விழுமோ எனும் அச்சத்தை உண்டாக்குகின்றன. தற்போது மழைக்காலமாதலால் மின்கம்பங்களால் விபத்து அபாயம் பலமடங்கு அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் இக்கிராம மக்கள் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கைகள் இல்லையென குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே விபத்து நேரும் முன்பு விரைந்து செயல்பட்டு புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டுமென இக்கிராமங்களிலுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.