ராஜபாளையத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு

ராஜபாளையம் பகுதியில் நீண்டநாள்களுக்கு பிறகு மேற்கொண்ட ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளால் அகலமாக காணப்பட்ட பிரதான சாலைகள் மீண்டும்
Updated on
1 min read

ராஜபாளையம் பகுதியில் நீண்டநாள்களுக்கு பிறகு மேற்கொண்ட ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளால் அகலமாக காணப்பட்ட பிரதான சாலைகள் மீண்டும் சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பிற்குள் ளாகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ராஜபாளையம் அம்பலபுளி பஜார், முடங்கியாறு சாலைப் பகுதிகளில் கடந்த மாதம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளின் பெயர் பலகைகள், படிக்கட்டுகள், தள்ளுவண்டிகள் ஆகியவை அகற்றப்பட்டன.
இதையடுத்து சாலை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் அகலமாக இருந்தது. பின்னர் நாளடைவில் சாலையில் ஆக்கிரமித்திருந்த கடைகள் அனைத்தும் சிறிது சிறிதாக முன்னேறியும், தள்ளுவண்டி கடைகளின் ஆக்கிரமிப்புகளும் தொடங்கி விட்டன. ஆனால் இதனை அதிகாரிகளின் கண்டுகொள்ளாததால், மீண்டும் பழைய நிலை உருவாகும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com