/

விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய சிறப்புப் போட்டிகள்

News image
Updated On :2 நவம்பர் 2017, 3:14 am

DIN

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய சிறப்புப் போட்டிகள் பலவற்றிலும் அருப்புக்கோட்டை சந்திரா நேசனல் பள்ளி மாணவர்கள் பல்வேறு பரிசுகளைப் பெற்றுள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற இப்போட்டிகளில், 12 வயதுக்குள்பட்டோர் பிரிவில் மாணவர் ஆர்.பி. ஜெயமதன் 100 மீட்டர் ஓட்டத்தில் முதல் பரிசையும்,  உயரம் தாண்டுதலில் இரண்டாம் பரிசையும் வென்றார். 400 மீட்டர் ஓட்டத்தில் பி. சஞ்சய் இரண்டாம் பரிசையும், ஜெடிட்டா மேரி சுகுணா பாய் 100 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாம் பரிசையும், மேசைப்பந்துப் போட்டியில் மகேஷ்ராஜா, தருண் பிரகாஷ், வினித்குமார், சாகித்யன் ஆகியோர் குழுப்போட்டியில்  முதல்பரிசையும், 15 வயதுக்குள்பட்டோருக்கான ப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் பத்தாம் வகுப்பு மாணவர் பி.எம். கெளதம் இரண்டாம் பரிசையும், 9 வயதுக்குள்பட்டோருக்கான மேசைப்பந்து குழுப்போட்டியில் ஜஸ்வந்த் எனும் மாணவர்முதல் பரிசையும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களையும்,  அவர்களுக்குப் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் உதயபிரகாஷ், பிரசாத், சதீஷ்குமார் ஆகியோரையும் பள்ளிச் செயலாளர் பி.சி. சரவணன் மற்றும் பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.