சத்துணவு ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி உண்ணாவிரதம்

விருதுநகர் மாவட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் பணி நிரந்தரம் வலியுறுத்தி புதன்கிழமை உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் பணி நிரந்தரம் வலியுறுத்தி புதன்கிழமை உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில்  விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இப்போராட்டத்தில் சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை ரத்து செய்து,  காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், ஏராளமான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் சங்தத்தின் வட்டார சத்துணவு ஊழியர் சங்கத் தலைவர் தமிழரசி தலைமை வகித்தார். இணைச்செயலாளர் கருப்பையாராஜா முன்னிலை வகித்தார்.கிளைச்செயலாளர் சிவசுப்பிரமணியன் கோரிக்கைகளை விளக்கிப்பேசினார்.
  சிவகாசி: சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சாட்சியாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சிவகாசி கிளைத் தலைவர் அய்யம்மாள் தலைமை வகித்தார். இதில் 17 பெண்கள் 3 ஆண்கள் என மொத்தம் 20 பேர் கலந்து கொண்டனர்.
 சாத்தூர்:   சாத்தூரில் உள்ள மதுரை பேருந்து நிறுத்தம் முன்பும், வெம்பக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.  சாத்தூர்,வெம்பக்கோட்டை வட்டக் கிளையைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
அருப்புக்கோட்டை:  அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com