விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

முன்னாள் சபாநாயகர் காளிமுத்து நினைவு தினம் அனுசரிப்பு

சாத்தூர் அருகே முன்னாள் சபாநயகர் காளிமுத்துவின் 11ஆம் ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 12:25 am

DIN

சாத்தூர் அருகே முன்னாள் சபாநயகர் காளிமுத்துவின் 11ஆம் ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
   விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ராமுத்தேவன்பட்டியில் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் நினைவிடம் உள்ளது. இங்கு அதிமுக அம்மா அணியின் சார்பில் அதன் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன், அம்மா அணியின் விருதுநகர் மாவட்ட செயலாளர் எதிர்கோட்டை எஸ்.ஜி.சுப்பிரமணியன், டேவிட் அண்ணாதுரை ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். முன்னதாக காளிமுத்துவின் உறவினர்கள் அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நினைவிடம் அருகே நடைபெற்ற அன்னதானத்தை தங்கதமிழ்செல்வன்,எதிர்கோட்டை சுப்பிரமணியன்  ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் அதிமுக தொண்டர்களும், கிராமப் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு காளிமுத்துவின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.   இந்நிகழ்வின் போது மகளிரணி மாவட்ட செயலாளர் கவிதாதனசேகரன், மாவட்ட கழக பொருளாளர் இளங்கோவன்,மாவட்ட மாணவரனி செயலாளர் எஸ்.டி.முனீஸ்வரன்,நகர செயலாளர் முருகன்,தினகரன் பேரவை மாநிலசெயலாளர் சாந்திஆனந்த் உள்ளிட்ட ஏராளமோனர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.