மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

அருப்புக்கோட்டையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகளுடன் எம்எல்ஏ ஆலோசனை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் குடிநீர்த்தட்டுப்பாட்டை தீர்க்க  நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை அதிகாரிகளுடன் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:48 am

DIN

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் குடிநீர்த்தட்டுப்பாட்டை தீர்க்க  நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை அதிகாரிகளுடன் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார்.
 கூட்டத்துக்குப் பின் அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: அருப்புக்கோட்டை நகராட்சிக்கு ஒரு நாளைக்கு 50 லட்சம் லிட்டர் குடிநீர் தேவை. ஆனால் தற்போது மொத்தம் உள்ள குடிநீர்த்தொட்டிகளில் 33 லட்சம் குடிநீரை மட்டுமே தேக்க முடியும்.
இந்நிலையில் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ள 2 புதிய மேல்நிலைத் தொட்டிகளின் கொள்ளளவைச் சேர்த்தால் மட்டுமே ஒரு நாள் தேவைக்கான குடிநீரின் அளவை எட்ட முடியும். எனவே புதிய குடிநீர்த்தொட்டிகளை விரைவில் செயல்பாட்டிற்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
 அத்துடன்  நகராட்சிப்பகுதிக்குத் தேவையான குடிநீரை 10 நாள்களுக்கு ஒரு முறை விநியோகம் செய்ய தாமிரபரணி கூட்டுக்குடிநீர்த் திட்டம் மூலம் தண்ணீர் பெற மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் மற்றும் இதர பொறியாளர்களுடன் ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க நிர்வாகத்தை முடுக்கி விட்டுள்ளேன் என்றார்.
  இக்கூட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய விருதுநகர் மாவட்ட நிர்வாகப் பொறியாளர் ராஜசேகரன், அருப்புக்கோட்டை உதவி நிர்வாகப்பொறியாளர் மணிமாறன், உதவிப் பொறியாளர் செல்வராஜன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.