கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

சித்தலக்குண்டு கிராமத்தில் தெருவில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதாரக் கேடு

திருச்சுழி வட்டம், சித்தலக்குண்டு கிராமத்தில் தெருவில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு, நோய்த்தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

Updated On :5 ஏப்ரல் 2018, 8:30 am IST

திருச்சுழி வட்டம், சித்தலக்குண்டு கிராமத்தில் தெருவில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு, நோய்த்தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.
 சித்தலக்குண்டு கிராமத்தில் பிரதான வீதியில் தார்ச்சாலை அமைத்து பல ஆண்டுகள்ஆகிவிட்டன. இந்நிலையில், உரிய பராமரிப்பில்லாததால், இந்த சாலை சேதமடைந்து, தற்போது, மண் சாலையாக மாறி விட்டது. 
 இந்த வீதியின் இருமருங்கிலும் இருந்த கழிவுநீர்க் கால்வாய்களும் முற்றிலும் சேதமடைந்து, மண் மூடி விட்டது. இந்நிலையில் இத்தெருவில் உள்ள வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், வீதியில் சிறுகுட்டைபோல் தேங்கி, பின்னர் அது நிரம்பி அருகிலுள்ள மழைநீர் ஓடைக்குச் செல்கிறது.
 இதுபோன்று, தெருவில் வழிந்தோடும் கழிவுநீரால், இப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு, கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. மேலும், நோய்த்தொற்று ஏற்பட்டு இப்பகுதி மக்களுக்கு அடிக்கடி வாந்தி, பேதி, சளி, இருமல் ஆகிய உபாதைகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 
 இதுதொடர்பாக ம.ரெட்டியபட்டி ஊராட்சி ஒன்றியத்திலும், சித்தலக்குண்டு ஊராட்சியிலும் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, கழிவுநீர்க் கால்வாய் அமைக்கவும், பிரதான வீதியில் தார்ச் சாலை அமைக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.