ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் 3 கோயில்களில் கும்பாபிஷேகம்

ஸ்ரீவில்லிபுத்தூர், மாதாங்கோவில் தெரு, அர்க்கசாலை விநாயகர், செந்தூர் முருகன், ராஜராஜேஸ்வரி கோயில்களில் மஹா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.  

Updated On :5 ஏப்ரல் 2018, 8:26 am IST

ஸ்ரீவில்லிபுத்தூர், மாதாங்கோவில் தெரு, அர்க்கசாலை விநாயகர், செந்தூர் முருகன், ராஜராஜேஸ்வரி கோயில்களில் மஹா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.  
விஸ்வகர்மா சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட இக்கோயில்களின் கும்பாபிஷேக விழா, கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. பல்வேறு அபிஷேகங்கள், பூஜைகளைத் தொடர்ந்து, புதன்கிழமை மூன்று கோயில் கோபுர கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இவ்விழாவை விஸ்வகர்மா சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீனந்தல மடாலய 65-ஆவது பீடாதிபதி ஸ்ரீ சிவ சிவராஜ சுவாமிகள் தலைமையிலான சிவச்சாரியார்கள் நடத்தினர். இதில், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ மு.சந்திரபிரபா முத்தையா உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் ஜெயவேல், ராக்குமுத்து, கருப்பையா, முத்துகிருஷ்ணன், கோசுகுண்டு மற்றும் திருப்பணிக்குழு தலைவர் முனியசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.