விருதுநகர் ஒன்றியம் கூரைக்குண்டு ஊராட்சி பகுதியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை உடனே தொடங்க வேண்டும். அதில், தூய்மை காவலர்களுக்கும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி பணியாளர்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் கூரைக்குண்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அதில், கூரைக்குண்டு பகுதியில் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை உடனே தொடங்க வேண்டும். இத்திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை அரசு மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான பணிகளுக்கு மாற்றக் கூடாது. மேலும், நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் தூய்மை காவலர்களுக்கும் பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.
முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு மாதர் சங்க ஒன்றிய செயலாளர் வள்ளியம்மாள், விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றிய செயலாளர் ராஜா தலைமை வகித்தனர். இதில், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முத்துக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜே.ஜே. சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய்யின் ஆட்சியால் சினிமாவில் சுதந்திரம் கிடைக்கும்: பேரரசு நம்பிக்கை

சட்டப்படி நிரூபித்த பிறகே தலைமை அலுவலகத்தில் கால் வைப்போம்: சி.வி. சண்முகம்

மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?

சென்னை, 10 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
