/

ராஜபாளையம் ஆறாவது மைல் அணையின் நீர்மட்டம் 12.5 அடியாக உயர்வுகோடையில் குடிநீர் தட்டுப்பாடு வராது:

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த  மழையின் காரணமாக ராஜபாளையம் ஆறாவது மைல் அணையின் நீர்மட்டம்

Updated On :19 ஏப்ரல் 2018, 2:17 am IST

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த  மழையின் காரணமாக ராஜபாளையம் ஆறாவது மைல் அணையின் நீர்மட்டம் 12.5 அடியாக உயர்ந்துள்ளது. இதனால்  கோடையில் ஏற்பட்ட குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.
    ராஜபாளையம் அருகே ராஜாம்பாறை, முள்ளிக்கடவு, வழுக்கு பாறை மற்றும் மலட்டாறு போன்ற பகுதிகளில் பெய்த மழையால் அய்யனார்கோவில் ஆற்றில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ராஜபாளையம் ஆறாவது மைல் நீர்தேக்கத்தின் நீர்மட்டம்  12.5 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் ஆற்றில் தொடர்ந்து நீர் வரத்து உள்ளது. இதே நிலை நீடித்தால் நீர்தேக்கத்தின் முழுக்கொள்ளளவான 20 அடியை எட்ட வாய்ப்புள்ளது.  
   நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், நடப்பாண்டில் கோடைகாலத்தில்  ராஜபாளையம் நகராட்சி குடிநீர் பிரச்னை ஏற்பட வாய்ப்பு இல்லை என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.  தற்போது ராஜபாளையம் நகராட்சியில் 42 வார்டுகளிலும் 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆறாவது மைல் நீர்தேக்கம் நிரம்பி வருவதால்,  3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்ய  நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.