சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

ரேஷன் அரிசியை மாவாக்கி விற்பனை: ராஜபாளையம் அருகே ஆலைக்கு "சீல்' வைப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ரேஷன் அரிசியை மாவாக்கி விற்பனை செய்த மாவு ஆலைக்கு செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் "சீல்' வைத்தனர்.

Updated On :18 ஏப்ரல் 2018, 8:28 am IST

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ரேஷன் அரிசியை மாவாக்கி விற்பனை செய்த மாவு ஆலைக்கு செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் "சீல்' வைத்தனர்.
தளவாய்புரம் அரிசி ஆலையில், ரேஷன் அரிசியை  மாவாக்கி, மாட்டுத்தீவனமாக விற்பதாக ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரனுக்கு புகார் வந்தது. அதன்பேரில் அதிகாரிகள் சோதனை செய்தனர். 
 தளவாய்புரம் பால் டிப்போ அருகில் உள்ள  மாவு மில்லை ஆய்வு செய்த போது, 250 கிலோ ரேஷன் அரிசியினை, மூட்டைகளில்  மறைத்து வைத்து இருந்தது கண்டறியப்பட்டது. பொதுமக்களிடம் கிலோ ரூ.5  விலையில், ரேஷன் அரிசியை வாங்கி அரைத்து, மாட்டுத்தீவனத்திற்கு வெளிச்சந்தையில் விற்று வருவது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து மாவு ஆலைக்கு  அதிகாரிகள் "சீல்' வைத்தனர். கைப்பற்றப்பட்ட அரிசியினை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் ஒப்படைத்தனர். இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு, பரிந்துரை செய்துள்ளதாக ராஜபாளையம் தனி வட்டாட்சியர் சீனிவாசன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.