ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

சத்திரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தக் கோரி போராட்டம்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :3 ஆகஸ்ட் 2018, 1:06 am IST

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  சத்திரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் நிர்வாகி முனியாண்டி தலைமை வகித்தார். விசைத்தறி தொழிலாளர்கள் நிறைந்த இப் பகுதியில், நாள் ஒன்றுக்கு சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை வருவதால் 24 மணி நேரமும் செயல்படும் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். மேலும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து இடமாற்றப்பட்ட பெண் மருத்துவரை உடனடியாக மீண்டும் நியமனம் செய்ய வேண்டும். லேப் தொழில் நுட்ப வல்லுநர் ஒருவரை பணியமர்த்த வேண்டும். துப்புரவு பணியாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும். 30 படுக்கைகள் கொண்ட கட்டடம் கட்ட வேண்டும்.  இரவு நேர காவலாளியை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.