போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

சிவகாசியில் சொத்துவரி உயர்வை 25 சதவீதமாக்க கோரிக்கை

சிவகாசியில் சொத்துவரி உயர்வை 25 சதவீதமாக்க வேண்டும் என சிவகாசி சிறு, குறு வியாபாரிகள் சங்க நிர்வாகி பி.தியாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Updated On :30 ஜனவரி 2024, 9:53 pm IST

சிவகாசியில் சொத்துவரி உயர்வை 25 சதவீதமாக்க வேண்டும் என சிவகாசி சிறு, குறு வியாபாரிகள் சங்க நிர்வாகி பி.தியாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: 
சிவகாசி நகரில் 2008 ஆம் ஆண்டு புதிய சொத்துவரியாக குடியிருப்புகளுக்கு சதுர அடிக்கு ரூ.2.50 பைசாவும், தொழிற்சாலைகளுக்கு சதுர அடிக்கு ரூ.5.01பைசாவாகவும், கடை, அலுவலகம், கிட்டங்கி ஆகியவற்றுக்கு சதுர அடிக்கு ரூ.7.51 பைசாவாகவும் உயர்த்தப்பட்டு, நகராட்சி வசூல் செய்து வருகிறது.
தொடந்து சிவகாசி நகராட்சியில் 2017ஆம் ஆண்டு முதல் ரூ.500 சொத்துவரி செலுத்துபவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை வரி ரூ.120 எனவும், ரூ.500-க்கு மேல் ரூ.1000 வரை சொத்துவரி செலுத்துபவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை வரி ரூ.240 எனவும், ரூ.1000-த்துக்கு மேல் ரூ.2000 வரை சொத்துவரி செலுத்துபவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை வரி ரூ.360 எனவும், ரூ.2000-க்கு மேல் சொத்துவரி உள்ளவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை வரி ரூ.600 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சொத்துவரி 50 சதம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே சிவகாசியில் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சொத்துவரி உயர்வு பொதுமக்களை பாதிக்கும். 
எனவே சொத்துவரி உயர்வை 50 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இம்மனுவின் நகல் நகராட்சி நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.