சிவகாசி அருகே வியாழக்கிழமை பட்டாசு ஆலை மேலாளரை கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு தப்பிய அஸாம் மாநில தொழிலாளர்களை போலீஸார் தேடுகின்றனர்.
சிவகாசி வட்டம் மம்சாபுரம் அருகே பள்ளபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில், ரெங்கசமுத்திரபட்டியைச் சேர்ந்த செல்லையா மகன் செல்வராஜ் என்ற செல்வம் (35) மேலாளராகப் பணிபுரிந்து வந்தார்.அந்த ஆலையில் அஸாம் மாநிலத்தைச் சேர்ந்த உசேன் அலி(49) மற்றும் அவரது உறவினர்கள் என மூன்று குடும்பங்கள் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த மூன்று குடும்பங்களுக்கிடையே கடந்த திங்கள்கிழமை தகராறு ஏற்பட்டதாம். இதையடுத்து ஆலை மேலாளர் செல்வராஜ் அவர்களை சமாதானப்படுத்திள்ளார். இதனால் உசேன் அலி குடும்பத்தினருக்கும் செல்வராஜ்-க்கும் இடையே பகை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை உசேன் அலி மற்றும் அவரது உறவினர்கள் சிலர் செல்வராஜூவை தாக்கி ஆலையின் எதிர்புறம் உள்ள கிணற்றில் தள்ளிவிட்டுவிட்டு தப்பியோடிவிட்டார்களாம்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மாரனேரி போலீஸார், கிணற்றில் மிதந்த செல்வராஜின் சடத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து தப்பியோடிய நபர்களைத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 27 - நேரலை

Ban NEET! Ban NEET! நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் போராட்டம்!
உதயநிதி தலைமையில் நாளை (ஜூலை 28) திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

பின்னாளில் அழாதீர்கள்! அகிலேஷ் யாதவை கூட்டணிக்கு அழைத்த ஓவைசி!
விடியோக்கள்

மேக்கேதாட்டு அணை; முதல்வர் தெளிவாக இருக்கிறார்!: அமைச்சர் செங்கோட்டையன் | TVK | NEET


