பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

ஆமத்தூர் அலுமினிய பவுடர்  ஆலையில் தீ: இளைஞர் சாவு

விருதுநகர் அருகே மேல ஆமத்தூரில் உள்ள அலுமினிய பவுடர்  ஆலையில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், இளைஞர் உயிரிழந்தார்.

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

விருதுநகர் அருகே மேல ஆமத்தூரில் உள்ள அலுமினிய பவுடர்  ஆலையில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், இளைஞர் உயிரிழந்தார்.
 போஸ் பெருமாள் (60) என்பவருக்குச் சொந்தமான ஆலையை சிவகாசி ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த அருண் சங்கர் மனைவி மகேஸ்வரி(35) வாடகைக்கு எடுத்து, கம்பி மத்தாப்பு பட்டாசுக்கான அலுமினிய பவுடர் தயாரித்து வந்துள்ளார். ஆலையில் ஒரு பெண் உள்பட 5 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.      புதன்கிழமை அதிகாலை எழுந்து அலுமினிய பவுடர் தயாரிப்பதற்காக நந்திரெட்டியபட்டியைச் சேர்ந்த அய்யாவு மகன் கண்ணன் (27) செவ்வாய்க்கிழமை இரவு ஆலையில் தங்கியுள்ளார். இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை காலை 3 மணி அளவில் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், அங்கு படுத்து உறங்கிக்கொண்டிருந்த கண்ணன் தீயில் கருகி  சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மேலும் ஆலையில் இருந்த அலுமினிய பவுடர்களும் எரிந்து நாசமாகின.  தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆமத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.