சிவகாசியில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் புதன்கிழமை சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் முகமது சிராஜ் தேசியக் கொடியை ஏற்றினார்.நிகழ்ச்சியில் பொறியாளர் சீனிவாசன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் தினகரன் தேசியக் கொடியை ஏற்றினார். அதே போல் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர்ஆர்.பரமானந்தராஜா தேசியக் கொடி ஏற்றினார். சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டி.எஸ்.பி. பிரபாகரனும், சிவகாசி சுகாதாரத்துறை அலுவலகத்தில் இணை இயக்குநர் ராம்கணேஷூம் தேசியக் கொடியை ஏற்றினர்.
அதே போல் சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வர் (பொறுப்பு) மா.காமராஜ் தேசியக் கொடியை ஏற்றினார். அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் பிரகலாதன் தேசியக் கொடி ஏற்றினார்.
அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் முதல்வர் செ.அசோக் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியில் தொழிலதிபர் எஸ்.ராஜேஷ் தேசியக் கொடியை ஏற்றினர். இதில் தாளாளர் ஏ.பி.செல்வராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எஸ்.எப்.ஆர்.மகளிர் கல்லூரியில் முதல்வர் த.பழனீஸ்வரியும், அய்யநாடார் ஜானகி அம்மாள் பாலிடெக்கினிக்கில் முதல்வர் ஒய்.அனிலெட் அன்பரசியும், அரசன் கணேசன் பாலிடெக்கினிக்கில் முதல்வர் எம்.நந்தகுமாரும் தேசியக் கொடியை ஏற்றினர்.
அதே போல் பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியில் தாளாளர் ஆர்.சோலைச்சாமியும், மெப்கோ சிலங் பொறியியல் கல்லூரியில் முதல்வர் எஸ்.அறிவழகனும், ரிசர்வ் லயனில் உள்ள அரிமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளித் தலைவர் கே.எஸ்.குமரேசனும், தேசியக் கொடியை ஏற்றினர். இதில் தாளாளர் என்.இளங்கோவன், முதல்வர் பி.காளீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியை கே.பூமாரி நன்றி கூறினார்.
சபையர் மெட்ரிக். பள்ளியில் தாளாளர் ஏ.ஞானசேகரன் தேசிய கொடியை ஏற்றினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

BJP - DMK நட்புறவா? அரசியலில் நண்பன், எதிரி கிடையாது! கனிமொழி சோமு

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 9 - நேரலை!

புதுவை காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ண விருது! மத்திய அமைச்சர் அமித் ஷா வழங்கினார்!

சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK


