சாத்தூர் அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்த 6 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
விஜயகரிசல்குளம், வெற்றிலையூரணி பகுதிகளில் அனுமதியின்றி வீட்டில் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து வெம்பக்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் ஞானசேகரன் மற்றும் போலீஸார் செவ்வாய்க்கிழமை விஜயகரிசல்குளம் பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தினர்.
சோதனையில், விஜயகரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த குருநாதன் (31), கணேசன் (32), பாண்டியராஜன் (30), தங்கராஜ் (44), சாந்தி (எ) பாண்டியராஜன் (44) ஆகியோர் வீடுகளில் வைத்திருந்த தலா 20 கிலோ சோல்சா வெடிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மேலும் வெற்றிலையூரணி பகுதியில் நடத்திய சோதனையில் எட்டப்பன் (எ) குருசாமி வீட்டில் 30 கிலோ கார்ட்டூன் வெடிகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இவ்விரு சோதனைகள் குறித்து வெம்பக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து குருநாதன், கணேசன், பாண்டியராஜன், தங்கராஜ், சாந்தி (எ) பாண்டியராஜன், எட்டப்பன் (எ) குருசாமி ஆகிய ஆறு பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





