அருப்புக்கோட்டை நகரில் வியாழக்கிழமை பலமுறை அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
அருப்புக்கோட்டை நகர்ப் பகுதிகளில் வியாழக்கிழமை வழக்கத்தைவிட அதிகமாக காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணிக்குள் மூன்றுமுறை மின்தடை ஏற்பட்டது. ஒவ்வொருமுறையும் 15 நிமிடம் முதல் அரை மணிநேரம் வரை மின்தடை ஏற்பட்டது.
மேலும் இதேபோல் பிற்பகலிலும் மின்தடை ஏற்பட்டதால் வழக்கமான பணிகளை மேற்கொள்ள இயலாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். குறிப்பாகப் பல தொடக்கப் பள்ளிகளிலும் பிற்பகலில் ஏற்பட்ட மின்தடை காரணமாக மாணவ, மாணவியர் வகுப்பறையில் போதிய வெளிச்சம் இன்றி அவதிப்பட்டனர். அருப்புக்கோட்டைநகரில் சிறுமழைக்குக்கூட மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
இதற்குப் போதுமான பணியாளர்கள் இல்லாததால் துணை மின் நிலையங்கள் மற்றும் மின்கம்பிகள், மின்இணைப்புகளில் நடைபெற வேண்டிய பராமரிப்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதே காரணம் என மின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆகவே போதுமான பணியாளர்களை நியமித்து பராமரிப்புப் பணிகளில் உள்ள தொய்வு நிலையைச் சீர்செய்ய மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முந்தைய ஆட்சிகளில் கொண்டுவந்த பயனுள்ள திட்டங்கள் தொடரும்: முதல்வர் விஜய் சுதந்திர நாள் உரை!

சுதந்திர நாள்: மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

சுதந்திர நாள் விழா: ஸ்ரீநடராஜர் கோயில் கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது!

மழையால் பாதிக்கப்படும் நெல் மூட்டைகள்: கொள்முதலை விரைவுபடுத்த விவசாயிகள் கோரிக்கை
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju


