ராஜபாளையம் அருகே கோயிலில் அமைச்சர் ஆய்வு
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சோழபுரம் விக்ரபாண்டீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை தமிழக அமைச்சர் க.பாண்டியராஜன் ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சோழபுரம் விக்ரபாண்டீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை தமிழக அமைச்சர் க.பாண்டியராஜன் ஆய்வு மேற்கொண்டார்.
ராஜபாளையம் அருகேயுள்ள சோழபுரம் கிராமத்தில் உள்ள இந்து அறநிலையத் துறையின் கட்டுபாட்டில் உள்ள இக் கோயில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது.
இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற உள்ள நிலையில், தமிழக தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா.கே. பாண்டியராஜன் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.
அப்போது, இக் கோயிலுக்கு ராஜகோபுரம் அமைக்க வேண்டும், பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் உள்ள கோயிலின் தெப்பகுளத்தை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அப்போது அமைச்சர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






