விருதுநகர் மாவட்டம், ராஜபளையம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ராஜபாளையம் அருகே தென்கரையை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி காளியம்மாள்.(55). இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. மேலும் பெரியசாமி 20 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். காளியம்மாள் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர் மேட்டு வடகரையில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தைகளை பராமரிக்கும் வேலை செய்து வந்துள்ளார். புதன்கிழமை இரவு வழக்கம் போல வீட்டு வேலைகளை முடித்து விட்டு உறங்க சென்றுள்ளார். வியாழக்கிழமை காலை இவர் வெளியே வராத நிலையில், இவரது வீட்டின் தொலைக்காட்சி அதிக சத்தத்துடன் ஓடிக் கொண்டிருந்துள்ளது. சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வந்து வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது, தலையில் பலத்த காயத்துடன் காளியம்மாள் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த கீழராஜகுலராமன் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இதில் காளியம்மாள் அணிந்திருந்த இரு தங்க சங்கிலிகள், இரு மோதிரங்கள் வீட்டில் இருந்து ரொக்கப் பணம் உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இக் கொலை சம்பவம் தொடர்பாக கீழராஜகுலராமன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உங்களுக்கும் சிபிஐ வழக்கு இருக்கு! Udhayanidhi Vs N Anand! | TN Assembly
ரியோ நடிக்கும் ராம் இன் லீலா படத்தின் டிரைலர் அறிவிப்பு!

காதல் காதல் காதல் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

பெண்கள் ஜீன்ஸ் அணிவதால் வன்கொடுமை.. தில்லி உயர்நீதிமன்றம் அளித்த காட்டமான பதில்!
விடியோக்கள்

உங்களுக்கும் சிபிஐ வழக்கு இருக்கு! Udhayanidhi Vs N Anand! | TN Assembly


