பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

காவல் துறையைக் கண்டித்து  மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது காவல்துறை தடியடி நடத்தியதைக் கண்டித்து அருப்புக்கோட்டையில் வியாழக்கிழமை இரவு அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 8:02 pm

DIN

தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது காவல்துறை தடியடி நடத்தியதைக் கண்டித்து அருப்புக்கோட்டையில் வியாழக்கிழமை இரவு அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அருப்புக்கோட்டை நகர்குழுச் செயலாளர் காத்தமுத்து தலைமை வகித்தார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் தாமஸ், முத்துக்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் சந்திரமோகன், ஒன்றியச் செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது காத்தமுத்து பேசியதாவது: 
தூத்துக்குடியில் கோரிக்கையை வலியுறுத்தி அமைதியான முறையில் பேரணி நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்திய  தூத்துக்குடி மாநகர் காவல் அதிகாரி அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் கட்சித் தொண்டர்கள் மீது போடப்பட்ட வழக்கையும் வாபஸ் பெறவேண்டும் என்றார். பெண்கள்  உள்பட சுமார் 50-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.