சிவகாசியில் வியாழக்கிழமை சர்வர் பழுதால் பிஎஸ்என்எஸ் வாடிக்கையாளர்கள் தொலை பேசி கட்டணம் செலுத்த இயலாமல் அவதிப்பட்டனர்.
சிவகாசிப் பகுதியில் பிஎஸ்என்எல் மூலம் சுமார் நான்காயிரம் தொலை பேசி இணைப்புகள் உள்ளன. தொலை பேசி கட்டணம் செலுத்த இங்குள்ள வாடிக்கையாளர்கள் மையத்தில் இரு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதில் ஒரு கவுண்டர் மட்டுமே செயல்பட்டு வருகிறது.
இதனால் தொலை பேசி கட்டணம் செலுத்துபவர்கள் தினசரி நீண்டவரிசையில் நின்று செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில் வியாழக்கிழமை தொலைபேசி கட்டணம் செலுத்த பெண்கள் உள்பல பலர் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.இதையடுத்து பணியில் இருந்த ஊழியர், சர்வர் பழுதால் கணினி செயல்படவில்லை. சற்று நேரம் காத்திருக்கங்கள் எனக்கூறினாராம். இதையடுத்து வரிசையில் நின்ற பலர் கலைந்து சென்றுவிட்டனர்.
சிலர் சுமார் ஒரு மணி நேரத்திற்குமேல் வரிசையில் நின்று சர்வர் பழுதுநீக்கப்பட்ட பின்னர் பணம் செலுத்தினர். இது குறித்து வாடிக்கையாளர் சுரேஷ் கூறிதாவது:
சிவகாசி பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் மையத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் ஒரு கவுண்டர் மட்டுமே செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் அடிக்கடி கணினி பழுது, சர்வர் பழுது என பணம் செலுத்த இயலாமல் வாடிக்கையாளர்கள் அவதிப்படுவது வாடிக்கையாகிவிட்டது. அதிகாரிகள் அடிக்கடி இதுபோல பிரசனைகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.