தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: பெண் காயம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர்அருகே பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் காயமடைந்தார்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 8:03 pm

DIN

விருதுநகர் மாவட்டம் சாத்தூர்அருகே பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் காயமடைந்தார்.
    சாத்தூர் அருகே பனையடிபட்டியில் சிவகாசியைச் சேர்ந்த ஆறுமுகசாமி என்பவரது பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 50- க்கும் மேற்பட்டோர் ரோல் கேப் உள்ளிட்ட பட்டாசு தயாரிக்கும் பணியில் பணியாற்றி வருகின்றனர்.  வியாழக்கிழமை காலை வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்றது. 
இதில் ஒரு அறையில் ரோல் கேப் தயாரிக்கும் பணியில் மேலபுதூரை சேர்ந்த மேகலா(29) என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த அறையில் உராய்வின் காரணமாக தீ விபத்துஏற்பட்டது. 
 இதில் மேகலா காயமடைந்தார். உடனே அருகில் உள்ள பணியாளர்களே தீயை அணைத்து மேகலாவை சாத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த வெடி விபத்து குறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.