ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

மகளிர் சுகாதார வளாகம் சீரமைக்கப்படுமா?

அருப்புக்கோட்டை வட்டம் பாளையம்பட்டியில் சேதமடைந்துள்ள மகளிர் சுகாதார வளாகத்தைச் சீரமைக்க வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On :9 ஜூலை 2018, 1:34 am

அருப்புக்கோட்டை வட்டம் பாளையம்பட்டியில் சேதமடைந்துள்ள மகளிர் சுகாதார வளாகத்தைச் சீரமைக்க வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாளையம்பட்டி கிராமத்தின் இரண்டாவது பேருந்து நிறுத்தத்தை அடுத்துள்ள பெரிய கண்மாயின் கரை மீது பல ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் பயன்பாட்டிற்கு வந்து ஓராண்டு முடிவதற்குள்ளாகவே மின்மோட்டார் பழுது ஏற்பட்டு பல மாத இடைவெளிக்குப்பிறகு சீரமைக்கப்பட்டது. 
ஆனால் உரிய துப்புரவுப் பணியாளர்கள் இல்லை என்பதால் போதிய பராமரிப்பு இன்றி சுகாதார வளாகம் பயன்பாடற்றுப் போனது.  இதனால் இப்பகுதி பெண்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். ஆகவே மகளிர் சுகாதார வளாகத்தைச் சீர்செய்து மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும், ஆண்களுக்கும் தனியாக புதிய சுகாதார வளாகம் அமைத்துத்தரவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.