இருக்கன்குடி மாரியம்மன் கோயில் பின்புறம் திறந்தவெளியில் ஆடுகள் பலி கொடுக்கப்படுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. எனவே இதனை தவிர்க்க அப்பகுதியில் ஆடுவதைக் கூடம் அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஆனால் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு முறையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என பக்தர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனாக மொட்டையடித்து, ஆடுகளை பலி கொடுத்து வருகின்றனர். இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை தான் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. இதற்காக கோயில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 500-க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டுவது வழக்கம். ஆனால் கோயில் நிர்வாகம் சார்பில் ஆடுகள் வெட்டுவதற்கென தனிஇடம் ஒதுக்கப்பட்டிருந்தாலும், ஆடுவதைக் கூடம் அமைக்கப்படவில்லை. இதனால் கோயிலுக்கு பின்புறம் உள்ள பனைமரப் பகுதியில் பக்தர்கள் வரும் பாதையில் ஆடுகள் வெட்டப்படுவதால் இந்த பகுதியே துர்நாற்றம் வீசிவருகிறது. மேலும் ஆட்டின் கழிவுகளையும், ரத்தத்தினையும் இந்த பகுதிகளிலே விட்டு செல்வதால், பக்தர்கள் நடமாட முடியாமல் சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நோய் ஏற்படும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. மேலும் ஆட்டின் கழிவு மற்றும் எலும்புகளை உண்பதற்காக அதிகளவில் இந்த பகுதியில் நாய்களும் சுற்றித் திரிகின்றன. மேலும் இந்த நாய்கள் பக்தர்களை கடித்தும் காயப்படுத்துகின்றன. எனவே கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் நலன் கருதி நவீன முறையில் தண்ணீர் வசதியுடன் கூடிய ஆடுவதைக்கூடம் அமைக்கப்பட வேண்டும் என்பதே கோயிலுக்கு வரும் பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் கூறுகையில், ஆடுகள் வெட்டுவதற்கு என தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆடுவதைக்கூடம் அமைப்பதற்கும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை விவகாரம்: இன்று திமுக எம்.பி.க்கள் அவசரக் கூட்டம்!

50 இல்லாவிட்டாலும் 33 வரவேற்கத்தக்கது! மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மாயாவதி ஆதரவு!
ரூ. 9 லட்சம் கோடி லாபம்.. ஏறுமுகத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 1,300 புள்ளிகள் உயர்வு!
மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும்! டி.கே. சிவக்குமார்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

