காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

இரண்டாம் திருமணம் செய்த தலைமை காவலருக்கு 2 ஆண்டுகள் சிறை

முதல் மனைவி இருக்கும்போதே, இரண்டாம் திருமணம் செய்த தலைமைக் காவலருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சாத்தூர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது.

Updated On :30 ஜனவரி 2024, 6:44 pm IST

முதல் மனைவி இருக்கும்போதே, இரண்டாம் திருமணம் செய்த தலைமைக் காவலருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சாத்தூர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது.
 கள்ளிகுடியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (46). இவர், கடந்த 2010 இல் மதுரையில் உள்ள சிறப்பு காவலர் படையில் பணியாற்றியுள்ளார். அப்போது, அதே படையில் சமையலராக பணியாற்றிய பெரியகுளத்தைச் சேர்ந்த பாண்டிசெல்விக்கும் (40), மாரியப்பனுக்கும் தொடர்பு ஏற்பட்டு திருமணமானதாகக் கூறப்படுகிறது.
 இந்நிலையில் மாரியப்பனின் குடும்பத்தினர் சாத்தூர் அருகே தாயில்பட்டியை சேர்ந்த கார்த்திகாயினிக்கும்(32), மாரியப்பனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
 இந்நிலையில், சாத்தூர் நீதித்துறை நடுவர் மன்றம் 1-ல், மாரியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை எமாற்றி இரண்டாவது திருமணம் செய்துள்ளதாக கூறி கார்த்திகாயினி மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நடுவர்மன்ற நீதிபதி சண்முகவேல்ராஜ், மாரியப்பனினுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தார்.
 மாரியப்பன் தற்போது காரியாபட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.