காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிப்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த மூதாட்டியை ஏமாற்றி இரண்டரை பவுன் நகையைப் பறித்துச் சென்ற பெண்ணை போலீஸார் தேடி வருகிறார்கள்.

Updated On :26 ஜூன் 2018, 6:44 am IST

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த மூதாட்டியை ஏமாற்றி இரண்டரை பவுன் நகையைப் பறித்துச் சென்ற பெண்ணை போலீஸார் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கொளிஞ்சிபட்டியைச் சேர்ந்த 80 வயது மதிக்கத் தக்க மூதாட்டி சிகிச்சை பெறுவதற்காக அரசு மருத்துவமனைக்கு திங்கள்கிழமை வந்துள்ளார். இவரிடம் ஒரு பெண், முதியோர் ஓய்வூதியம் பெற்றுத் தருவதாக ஆசை வார்தை கூறியுள்ளார். மேலும் நகை அணிந்து இருந்தால் விண்ணப்பிக்க இயலாது என்று கூறியதை மூதாட்டி நம்பி, நகையை கழற்றிக்கொடுத்தாராம்.
 நகையை  வாங்கிக் கொண்டு அந்த பெண் தப்பி ஓடிவிட்டாராம். இச்சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் குற்றப் பிரிவு போலீஸார், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். 
 மருத்துவமனையில் பதிவாகியிருந்த  கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.