சென்னை மாநகராட்சி: கனமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! ஆக. 28-ல் மேட்டூர் அணை திறப்பு! முதல்வர் விஜய் வருகிறார்! ஏற்பாடுகள் முனைப்பு!13 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு! ‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிதமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து ராஜபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Published On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து ராஜபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராஜபாளையம் ஜவஹர் மைதானம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகர்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். 
நகரச்செயலாளர் மாரியப்பன், மாவட்டக் குழு உறுப்பினர்  கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இதில், சி.ஐ.டி.யு, வேன் ஓட்டுநர்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற் சங்கங்களை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றத்துக்கு காரணமாக இருக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், இவற்றை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர். 
 பெரு முதலாளிகளின் லாப நோக்கத்தை கருத்தில் கொண்டே மத்திய அரசு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வர மறுப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தின்போது, கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.