விருதுநகர் மாவட்ட தொடக்கக் கூட்டுறவு வங்கிகளில் நிர்வாகக் குழுக்கள் இல்லாத நிலையில் அவ்வங்கிகளை வழக்கம் போல் செயல்பட வைக்கக் கோரி அதன் பணியாளர்கள் தாங்கள் 3 நாள் ஒட்டு மொத்த விடுப்பு கோரி இணைப் பதிவாளர் ஆரோக்கியசுகுமாரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
தமிழ்நாடு தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் அளித்துள்ள அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 4,500 தொடக்கக் கூட்டுறவு சங்கங்களில் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் 4 கட்டங்களாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தால் இடைக்கால தடை விதிக்கப்பட்டு வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில், ஏற்கெனவே பொறுப்பில் இருந்த நிர்வாகக் குழுவின் பதவிக் காலம் மே 8- இல் முடிவடைந்தது. இதனால், தொடக்க கூட்டுறவு வங்கிகளில் எவ்வித தீர்மானமும் நிறைவேற்ற முடியவில்லை. இதன் காரணமாக பயிர்க் கடன், நகை கடன், மகளிர் குழு கடன் வழங்குதல் உள்ளிட்ட எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ள முடிவில்லை. அத்துடன் கூட்டுறவு சங்கங்களின் தினசரி வரவு, செலவுகளை பார்க்க முடிய வில்லை. அதேபோல், பணியாளர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வு கால நிதி பலன்கள் வழங்க இயலாத நிலையுள்ளது. இதுகுறித்து தமிழக அரசுக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
எனவே, சங்க நிர்வாகம் தடை யின்றி நடைபெறும் வகையில், தமிழக அரசு உரிய உத்தரவு பிறப்பிக்கும் வரை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் மே 21 ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு ஒட்டு மொத்த விடுப்பு எடுக்க உள்ளோம் என அதில் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மண்டல இணைப் பதிவாளர் அலுவலகத்தில் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்த 203 பேர் 3 நாள் விடுப்பு கோரி விண்ணப்பம் வழங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

