அருப்புக்கோட்டையில் பெண்ணிடம் ஐந்தரை பவுன் சங்கிலி பறிப்பு
அருப்புக்கோட்டையில் தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் ஐந்தரை பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் புதன்கிழமை பறித்துச் சென்றனர்.
அருப்புக்கோட்டையில் தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் ஐந்தரை பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் புதன்கிழமை பறித்துச் சென்றனர்.
விருதுநகர் மாவட்டம் ரோசல்பட்டியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரனின் மனைவி மகாலட்சுமி(51). இவர் புதன்கிழமை தனது மகன் தினேஷ் பிரபாகரனுடன் இருசக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற தனது உறவினர் இல்லத் திருமண நிகழ்சிக்குச் சென்றுள்ளார். பின்னர் இருவரும் மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இருவர் மகாலட்சுமி அணிந்திருந்த ஐந்தரை பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்து அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






